ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் முழு போதையில்..! பிக்பாஸ் மீரா மிதுன் வெளியிட்ட பப் வீடியோ!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த மீரா மிதுன் பப்பில் கும்மாளமாக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .


விஜய் டிவியில் மிகவும் பிரபலமடைந்து உள்ள ஒரு  நிகழ்ச்சி பிக் பாஸ் . தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாவது சீஸனில் பங்கேற்றவர் தான் மீரா மிதுன். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எலிமினேட் செய்யப்பட்டார். 

எனினும் பிக் பாஸ் வீட்டில் மீரா மிதுன் போட்ட ஆட்டத்தை எவராலும் மறக்க முடியாது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே மீரா மிதுன் எந்த போட்டியாளர்களுடன் சகஜமாக பழக வில்லை அனைவரிடமும் சண்டை சச்சரவு எனவே நீடித்து வந்தார். 

இதற்கு உச்சமாக இவர் சேரனுடன் நடந்து கொண்ட விதமானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பங்கேற்ற போது இயக்குனர் சேரன், அவரை  தகாத முறையில் அணுகியதாக மீரா மிதுன் பெரும் புரளியை கிளப்பினார்.

இந்த குற்றத்தை சற்றும் ஒப்புக்கொள்ளாத  சேரன் இதற்காக தன் குழந்தைகள் மீது கொண்ட சத்தியம் செய்தார். இதனை அடுத்து கமல்ஹாசன் வரும் எபிசோடில் இதனை குறித்த ஒரு குறும்படம் மீரா மிதுன் காக வழங்கப்பட்டது.

அந்த வீடியோவை பார்த்தவுடன் சேரன் மீது எந்த தவறும் இல்லை மீரா தான்  இதனை  ஒரு கட்டுக் கதையாக அமைக்க பார்த்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.

இதனையடுத்து  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மீரா மிதுன் தன் நண்பர்களுடன் உல்லாசமாக பப்பில் ஆட்டம் போட்ட வீடியோவை தானே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த நெட்டிசன்கள் இவரை கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

மீரா மிதுன் பதிவிட்ட அந்த வீடியோவில் ஆண் ஒருவருடன் மிகவும் நெருக்கமான முறையில்   நடனமாடுவதாக அமைந்துள்ளது இருவரும் கட்டிப்பிடித்து மிகவும் ஆபாசமாக இருக்கும் படியாக உள்ளது அந்த வீடியோ பதிவு . இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நீங்கள் இப்படி இருக்க ஏன் சேரனின் மீது அவதூறாக பேசிய வந்தீர்கள் எனவும் கமெண்ட் செய்து உள்ளனர் .