வனிதாவின் 3வது கணவர் ஆனார் பீட்டர் பால்! மகிழ்ச்சியில் மனைவி உதட்டை கவ்வி பரவசம்! என்னாச்சு தெரியுமா?

பிக்பாஸ் நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தேறி உள்ளது.


நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக வனிதா அறிமுகமானார். அதன்பின்னர் இவர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு தனது கணவரை நடிகை வனிதா விவாகரத்து செய்தார். 

பின்னர் அதே ஆண்டில் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை வனிதா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு நடிகை வனிதா அவரிடமிருந்தும் விவாகரத்துப் பெற்று பிரிந்தார். அதன்பின்பு நடிகை வனிதா கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் நடிகை வனிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை ஜூன் 27ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக இணையத்தின் வழியாக பேட்டி அளித்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் ஜூன் 27 ஆம் தேதியான இன்று பிரபல பிக்பாஸ் நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகியோர் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

தற்போது நிலவி வரும் லாக்டவுன் காரணமாக நடிகை வனிதாவின் வீட்டிலேயே இவர்களது திருமணம் எளிய முறையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.  மோதிரம் மாற்றிய கையோடு பீட்டர் பால் மற்றும் நடிகை வனிதா லிப் லாக் செய்துகொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.