மனைவி, மச்சினிச்சியுடன் பிக்பாஸ் கமலை சந்தித்த சாண்டி! காரணம் இது தான்!

பிக்பாஸ் புகழ் சாண்டி தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கமல்ஹாசனை சந்தித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலிகி வருகிறது.


சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனானது வெற்றிகரமாக முடிவடைந்தது. முடிவடைந்தவுடன் பிக்பாஸ் பிரபலங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த வண்ணம் உள்ளனர். சாண்டி தர்ஷனுடன் நடிகர் சிம்புவை சந்தித்து மகிழ்ந்துள்ளார். லாஸ்லியா சிம்புவின் நடன பயிற்சி இடத்திற்கு சென்று ஒரு குத்தாட்டத்தை போட்டுள்ளார். சாக்ஷி, ஷெரின் ஆகியோர் சேரனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது சாண்டி தன்னுடைய மனைவி குழந்தைகள் மற்றும் கொழுந்தியாளுடன் நடிகர் கமலஹாசனை சந்தித்துள்ள புகைப்படங்களானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வருங்கால படங்களில் பிக்பாஸ் நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக நடிகர் கமலஹாசன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சாந்திக்கும் விரைவில் நடன இயக்குநர் வாய்ப்பை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் லைக்குகளை அள்ளி வீசுகின்றனர்.