கார் மீது வெடி குண்டு தாக்குதல்! எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேர் கொடூர சாவு!

திடீர் குண்டுவெடிப்பில் பாஜக பெண் எம்எல்ஏ உள்ளிட்ட ஐந்து போர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.


சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை மறுநாள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு இறுதி நாளான இன்று பாஜக எம்எல்ஏ பீமா மண்டாவி தனது ஆதரவாளர்களுடன் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தந்தை வனப்பகுதியில் வாக்கு சேகரிக்க சென்று கொண்டிருந்தார். அவருடன் பாதுகாப்புப் படையினரும் இருந்தனர்.

பீமாவின் வாகனம் தந்தேவாடா பகுதியை நெருங்கியதும் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. பிடித்த வேகத்தில் பல அடிதூரத்திற்கு பீமாவின் கார் தூக்கி வீசப்பட்டது. காரில் இருந்த பீமா உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். பீமா உடன் சென்ற காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பிச்செல்ல முயன்றபோது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளனர். நாளை மறுநாள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்க உள்ள நிலையில் மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாஜக எம்எல்ஏ ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.