பாசம்! நேசம்! வலி! நட்பை கொண்டாடித் தீர்த்த தமிழ்ப்பட பாடல்கள் ஒரு பார்வை!

நட்பு, காதல் திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக பார்க்கப்பட்டு வருகிறது .


50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடல்கள் வந்தாலும் ப்ரெண்ட்ஷிப் டே என்று நினைத்தவுடன் நம் மனதிற்கு தோன்றும் பாடல் காதல் தேசம் திரைப்படத்தில் இடம்பெறும் முஸ்தபா முஸ்தபா பாடல் மட்டுமே . கல்லூரி மற்றும் பள்ளியில் ஃபேர்வெல் நிகழ்ச்சியில் நம் நண்பர்களை விட்டு பிரியும் போதும் நம் மனதில் தோன்றும் பாடலும் முஸ்தபா முஸ்தபா பாடல் மட்டுமே .

அதே அதே போல உள்ளம் கேட்குமே படத்தில் இடம்பெறும் ஓ மனமே ஓ மனமே பாடல் நம் கல்லூரி நண்பர்களை ஒரு நிமிடம் நம் கண் முன்னே கொண்டு வந்து செல்லும் .அந்த அளவுக்கு அந்தப் பாடலில் கூறப்பட்டுள்ள  நட்பின் ஆழம் அதிகம் . 

பாண்டவர் பூமி திரைப்படத்தில் இடம்பெறும் தோழா தோழா பாடலும் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான தூய்மையான நட்பை வெளிப்படுத்தும் பாடலாகவே அமைந்தது .

தளபதி படத்தில் இடம்பெறும் காட்டுக்குயிலு பாடலும்  இக்கால இளைஞர்களும் கொண்டாடும் வகையிலும்  நட்பின் ஆழத்தை விளக்கும் விதமாகவும் உள்ளது . நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெறும் நண்பனை பார்த்த தேதி மட்டும் பாடலை நினைத்தாலே போதும் மெய் சிலிர்த்துவிடும் .

ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நண்பர்களாக நடித்த நண்பன் திரைப்படத்தில் இடம்பெறும் என் ஃப்ரண்ட போல யாரு மச்சான் பாடலும் நண்பர்களின் முக்கியத்துவத்தை கூறும் பாடலாக அமைந்தது .

கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தில் இடம்பெறும் மனசே மனசே பாடல் நண்பர்கள் பிரியும் போது ஏற்படும் வலியை உணர்த்தும் பாடலாக அமைந்தது. இவ்வாறாக தமிழ் சினிமாவில் பல்வேறு பாடல்கள் நட்பு ,ஃபிரண்ட்  சென்டிமென்டை உணர்த்தும் பாடலாக அமைந்துள்ளது .