கொஞ்ச காலமாகவே தினகரனுக்கு நேரம் சரியில்லை. குருபெயர்ச்சி வந்தா டாப்பா வந்திருவாராம். அதுவரை அமைதி காக்க நினைத்துத்தான் பெங்களூரு புகழேந்தியை விட்டு வைத்திருக்கிறாராம்.
24ம் புலிகேசியா பெங்களூர் புகழேந்தி..? வலுக்கும் மோதல்! டென்சனில் டிடிவி! என்ன செய்யப்போகிறார் சசி?
இந்த நிலையில் பெங்களூரு புகழேந்தி இன்று சேலத்தில் முதல்வர் எடப்பாடியை தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வெளியே வந்தவர் ‘‘நான் அதிமுகவில் சேர்வதற்காக முதல்வரை சந்திக்கவில்லை, இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து சொல்லவே வந்தேன்’’ என்று மட்டும் சொல்லிவிட்டுப் போனார்.
இடைத்தேர்தல் வெற்றிக்கு சசிகலாவின் வாழ்த்து செய்தியைத்தான் புகழேந்தி முதல்வரிடம் கொண்டுவந்து சேர்த்தாராம். அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தினகரனை போட்டியில் இருந்து விலகியிருக்கச் சொன்னேன் என்று சசிகலா சொல்லி அனுப்பினராம்.
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குதுன்னு கேட்கிறீங்களா..? ஆனா, அப்படித்தான் பெங்களூரு புகழேந்தி சொல்கிறார். அதனால்தானோ என்னவோ புகழேந்தியை இரண்டாம் புலிகேசி என்று கேலி செய்கிறார் தினகரன்.
யார் சொல்றதைப்பா நம்புறது?