கிரிக்கெட் சூதாட்டம்! நடிகை ராதிகா மருமகனுக்கு ஸ்கெட்ச் போடும் போலீஸ்! அதிர்ச்சி காரணம்!

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் மற்றும் கேபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அபினவ் முகுந்த் அவர்களுக்கு பெங்களூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.


அபினவ் முகுந்த் தற்போது கர்நாடகா பிரீமியர் லீக் அழைக்கப்படும் கேபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் கேபிஎல் தொடரில் சிவமோகா லயன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

 இந்நிலையில் பெங்களூர் போலீசார் சிவமோகா லயன்ஸ் அணியின் கேப்டன் அபினவ் முகுந்த் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகார் வழக்கில் விசாரணைக்காக பெங்களூர் போலீசார் முன்பு ஆஜர் ஆகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

கர்நாடகா பிரீமியர் லீக் எனப்படும் கேபிஎல் தொடரில் நடந்து வருவதாக கூறப்படும் கிரிக்கெட் சூதாட்ட காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களும் அந்த அணியின் உரிமையாளர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு பெங்களூரு கிரைம் பிரிவு கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் அவர்களை விசாரிப்பதற்கு உடனடியாக ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த கிரிக்கெட் சூதாட்ட புகாரில்  விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள அபிநவ் முகுந்த் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.