ஒரே நிமிடத்தில் சிவஸஹஸ்ர நாமம்! 1008 திருநாமங்களை உச்சரித்த பலன் கிட்டும்!

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

இந்த ஸ்லோகத்தைப் படித்தால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுவதும் படித்த பலன் உண்டு என்ற விடயம் அனைவரும் அறிவோம்.

இதைப் போல் சிவஸஹஸ்ரநாமத்திற்கும் ஒரு எளிய வழியுண்டு என்று நம்மில் எத்தனை பேர் அறிவோம்???

சிவபெருமானால் உபதேசிக்கபட்ட இந்ந அதியத்புதமான எட்டு நாமாக்களை சொல்வதால் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும்.

அது என்ன எட்டு நாமாக்கள்????

"ஷிவோ மஹேஷ்வரஸ்சைவ ருத்ரோ விஷ்ணு: பிதாமஹ:|

ஸம்ஸாரவைத்ய: ஸர்வஜ்ஞ: பரமாத்மா ஸதாஷிவ:||"

பொருள்:

ஷிவோ: அனைத்து வித மங்களங்களையும் அளிப்பவன்

மகேஷ்வர: முடிவில்லா மஹா அண்டத்தை உடையவன்

ருத்ர: ருத்ரன் (சிவபெருமானின் வடிவங்களிள் ஒன்று)

விஷ்ணு: எங்கும் நிறைந்து இருப்பவர்

பிதமஹா: ப்ரஹ்மனின் வடிவாக இருப்பவர்

ஸம்ஸாரவைத்ய: ஸம்ஸாரம் எனும் கொடிய நிலையிலிருந்து காப்பாற்றும் ஒரே வைத்தியர்

ஸர்வேஷ_பரமாத்மா: அனைத்து கடவுள்களினுள்ளும் இருக்கும் பரமாத்மா

ஸதாசிவ: தென்னகச் சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவனின் வடிவம்

இந்த எட்டு திருநாமாக்களை ஒருவன் மூன்று முறை சொல்வதால் சிவ பெருமானின் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

இன்றைய அவசர சூழ்நிலையில் 1008 நாமாக்களை பாராயணம் செய்ய நேரம் இல்லாத சந்தர்பங்களில் இந்த எட்டு புனித நாமாக்களைக் கூறி சிவஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்த பலனைப் பெறுவோம்.

More Recent News