தலைமைப் பதவிக்கு ஆசையா? உங்க ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கிறதா என்று பாருங்கள்!

நம்முடைய வாழ்வில் வரும் இன்ப, துன்பம் அனைத்தும் நவகிரகங்களின் செய்கையால் நடக்கிறது.


ஜோதிடப்படி கோள்கள் ஒன்பது ஆகும். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்பனவாகும். நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாகும்.

பொதுவாக ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு கட்டங்களிலும் உள்ள கிரகங்களை வைத்து பலன் கூறுவார்கள். பொதுவாக ஜாதகத்தில் கிரகங்கள் வீடுகளில் தனித்திருந்தால் நல்லது. அல்லது ஒரு வீட்டில் (30 பாகைக்குள்) இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது அவை நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகவோ அல்லது ஒன்றிற்கு ஒன்று நட்புடைய கிரகங்களாகவோ இருந்தால் நல்லது.

ஜாதகக்கட்டத்தில் நான்கு கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அந்த வகையில், நாம் இன்று நான்கு கிரகங்கள் ஒன்று சேர்ந்து இருந்தால் உண்டாகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

சூரியன் + செவ்வாய் + புதன் + குரு : நிலையற்ற தன்மையுடையவர்கள். பார்வை கோளாறு உடையவர்கள். அலைச்சல் கொண்டவர்கள்.

சூரியன் + செவ்வாய் + புதன் + சுக்கிரன் : எதிர்பாலின மக்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள். பொறாமை குணம் உடையவர்கள். பிறர் பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

சூரியன் + செவ்வாய் + புதன் + சனி : அரசு சம்பந்தமான பணிகளில் தொடர்பு உடையவர்கள்.

சூரியன் + செவ்வாய் + குரு + சுக்கிரன் : தலைமை பதவி வகிக்கக்கூடியவர்கள். பிரபலமானவர்கள். தனசேர்க்கை உடையவர்கள்.

சூரியன் + செவ்வாய் + குரு + சனி : எதிலும் அச்சம் உடையவர்கள். உறவு மற்றும் நண்பர்கள் அதிகம் கொண்டவர்கள்.

சூரியன் + செவ்வாய் + சுக்கிரன் + சனி : நேர்மையான குணம் கொண்டவர்கள். பழிச்சொற்களுக்கு ஆளாகக்கூடியவர்கள்.

சூரியன் + புதன் + குரு + சுக்கிரன் : தனலாபம் கொண்டவர்கள். கல்வியில் சிறந்து விளங்கக்கூடியவர்கள். சாதுர்யமாக செயல்படக்கூடியவர்கள்.

சூரியன் + புதன் + குரு + சனி : சண்டையிடுவதில் ஆர்வம் கொண்டவர்கள். விளையாட்டுத்தனம் உடையவர்கள். உறவுகளிடத்தில் ஆதரவு இல்லாதவர்கள்.

சூரியன் + புதன் + சுக்கிரன் + சனி : ஆச்சாரம் உடையவர்கள். வித்தைகள் பல கற்றவர்கள்.