நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் பெட்டி பெட்டியாக பீர் பாட்டில்கள்! பறிமுதல் செய்த போலீசாருக்கு உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

கிழக்கு கடற்கரை சாலை முட்டுக் காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்த காரை சோதனை செய்தபோது பெட்டி பெட்டியாக பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு என்ற பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கடந்த வியாழக்கிழமை இரவு கானத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இன்னோவா சொகுசு காரை மறித்து போலீசார் சோதனையிட வேண்டும் என்று கூறினர். அப்போது அந்த காரில் இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் காரை சோதனையிடுவதற்கு சம்மதம் தெரிவித்தனர். 

இதன் காரணமாக வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சோதனையில் காரின் உள்ளே 96 பீர் பாட்டில்கள் மற்றும் 8 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக போலீசார் அந்த காரை ஓட்டிவந்த சென்னை அபிராமி புரத்தை சேர்ந்த செல்வகுமார் என்ற நபரை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

பின்னர் சிறிது நேரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் கார் ஓட்டுனர் செல்வகுமார் என்பவரை பெயிலில் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.