சருமம் எப்படியிருந்தால் அழகு என்று தெரியுமா?

ஒருவர் வெண்மையான சருமம் கொண்டவர்களாக இருந்தால் மட்டும் அழகு என்று சொல்ல முடியாது.


அந்த சருமம் எவ்விதமான குறைவும் இன்றி, மாசு மருவற்றதாக இருத்தல் அவசியம்.

ஆனால் சருமம் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரியாக இராது. காற்று, வெளிச்சம், குளிர், வெயில் ஆகியவற்றிற்கு ஏற்ப சருமத்தின் நிறமும், தன்மையும் மாறக்கூடியது ஆகும். அதனால் சருமத்தைப் பாதுக்காக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். 

சருமத்தைப் பாதுகாக்க ஆரோக்கியம், சுத்தம், சத்துள்ள உணவு, போதிய உடற்பயிற்சி போன்றவையே அடிப்படை ஆகும்.

சருமத்தைப் பாதுகாக்க நினைப்பவர்கள் முதலில் அவர்களது சருமம் எந்த வகைப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தேவையான அழகு கிடைக்கும்.