முடி நரைத்தவுடன் செய்யவேண்டியது என்ன தெரியுமா?

மனிதர்களாகப் பிறந்த அனைவருமே வயதானபின் நரை ஏற்படுவதைத் தாங்கிக் கொள்ளவே வேண்டும்.


எத்தனை அக்கறையுடன் தலைமுடியைப் பாதுகாத்தாலும் நரை ஏற்படாமல் தடுக்க முடியாது. சிறிய வயதில் இருந்தே போதுமான கவனிப்பு செலுத்தி வந்தால் இளநரையை வேண்டுமானால் தடுக்கலாம்.

நரைமுடி தரும் வெண்மைகூட சிலருக்கு அழகான தோற்றத்தைத் தருகிறது. ஆனாலும் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தம் தலைமுடிக்குடைஎனப்படும் கறுப்புச் சாயம் பூசிக்கொண்டு இளமையாகத் தோற்றமளிக்க ஆசைப்படுகிறார்கள். அப்படி டை அடிக்க விரும்புபவர்கள் பின்விளைவுகள் இருக்காது என்ற காரணத்தால் ஹெர்பல் டை எனப்படும் மருதாணிப் பவுடர் கொண்டு தயாரிக்கப்படும்காலாமெஹந்தியைப் பலரும் பயன்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் இந்த ஹெர்பல் டைக்கு அதிகமான அளவு மெனக்கெட வேண்டும் என்பதை கண்டுகொள்வதில்லை.

இப்போது அலர்ஜி ஏற்படுத்தாத பல்வேறு வேதிப்பொருட்கள் வந்திருக்கின்றன. இதனை பியூட்டி பார்லரில் போய் கண்டுபிடித்து போடுவதற்குப் பதிலாக, மருத்துவரை சந்தித்து சரியான டையை தேர்வு செய்யுங்கள். அதுதான் பக்கவிளைவு இல்லாததாக இருக்கும்.