செல்ல நாயால் அம்மாவுக்கு ஏற்பட்ட மரணம்.. கண்ணீரில் 3 பெண் பிள்ளைகள்... டாக்டர் சொல்லும் உண்மைக் கதை

வீட்டில் வளர்க்கும் செல்ல நாயால் மரணம் நேர வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார் தஞ்சையை சேர்ந்த மருத்துவர் ஒருவர். என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்.


சமீபத்தில் உறவினர் ஒருவர் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தெரிந்து காணப் போயிருக்கிறார் அந்த பொது மருத்துவர். அவர் பார்க்கப்போன பெண்மணியை வெறிநாய் ரேபீஸ் தடுப்பு பிரிவில் அனுமதித்து இருந்தனர். அந்த நோய் முற்றிய நிலையில் மருந்து இல்லை என்பது டாக்டருக்குத் தெரியும்.

பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி எப்படி அங்கே வந்தார் என்பதுதான் பெரும் சோகம். அந்தப் பெண்ணுக்கு வயது 40. மூன்று பெண் குழந்தைக்ள் இருக்கிறார்கள். யாருக்கும் இன்னமும் திருமணம் ஆகவில்லை. ஓரளவு வசதியான குடும்பம். அதனால் வீட்டில் நீண்ட காலமாகவே நாய் வளர்த்து வருகிறார்கள். இப்போது அவர்கள் வளர்த்துவரும் அல்சேஷன் நாய்தான் அந்தப் பெண்ணின் மரணத்துக்குக் காரணமாம்.

அந்த நாய்க்கு உணவு கொடுக்கும்போது லேசாக கடித்திருக்கிறது. அந்த நாய்க்கு அனைத்து விதமான தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கிறது. மேலும், அந்த நாயை மிகவும் சுகாதாரமாக வளர்த்துவருகின்றனர். மேலும் அந்தப் பெண்ணும் தடுப்பூசி போட்டிருக்கிறார். அதனால் அந்த லேசான  நாய்க்கடியை கண்டுகொள்ளவில்லை.

இரண்டே வாரங்களில் உடலில் சில பிரச்னைகள் தோன்றியுள்ளது. நாய்க்கடி என்று தெரியாமல் சில மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டிருக்கிறார். அதன்பிறகு நோய் முற்றியபிறகே ரேபீஸ் என்பது தெரியவந்திருக்கிறது. தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், இரண்டே வாரத்தில் அந்தப் பெண் மரணத்தைத் தழுவிவிட்டார்.

அதன்பிறகு அந்தப் பெண் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் எரியூட்டப்பட்டது. மூன்று பிள்ளைக்ளை கட்டிக்கொடுத்து பாசமுடன் பார்க்கவேண்டிய தாய் திடீரென மரணம் அடைந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. செல்ல நாயால் இப்படி மரணம் ஏற்படுமா என்று தெரியாமல் மூன்று குழந்தைகளும், கணவரும் அழுது புலம்பி வருகிறார்கள்.

இதுகுறித்துப் பேசிய மருத்துவர், வீட்டில் வளர்க்கும் ச்ல்ல நாய் என்றாலும், முறையாக தடுப்பூசி போடப்பட்டவை என்றாலும் அவற்றிடம் 10% ரேபீஸ் தாக்கம் இருக்கவே செய்யும். அதனால் எந்தக் காரணம் கொண்டும் நாய்க்கடியை அலட்சியப்படுத்தவே கூடாது என்று சொல்கிறார். நாய் மீது அன்பு செலுத்துவது சரிதான், ஆனால், தள்ளியிருந்தே அன்பு காட்டுங்கள் அதுதான் நாய்க்கும் நல்லது, நமக்கும் நல்லது.