ஹெலிகாப்டர் விபத்தில் தான் உயிரிழப்பார்! கோப் பிரயன்ட் மரணத்தை 8 வருடத்திற்கு முன்பே துல்லியமாக கணித்த அமானுஷ்ய மனிதன்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் தான் உயிரிழப்பார் என 8 வருடத்திற்கு முன்பே துல்லியமாக அமானுஷ்ய மனிதர் ஒருவர் கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கூடைப்பந்து வீரர்கள் பட்டியல் மிகவும் புகழ்பெற்ற வீரராக வலம் வந்தவர் கோபி பிரையன்ட்( வயது 41). இவர் 5 முறை என்பிஏ சாம்பியன் மற்றும் 2 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் ஆகியவற்றை வென்றுள்ளார். இந்த விளையாட்டு வீரர் லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்காக கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக கூடைப்பந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

உலகில் உள்ள பலருக்கும் முன்மாதிரியாக விளங்க கூடிய கோப் பிரையன்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன் மகளுடன் ஹெலிகாப்டரில் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். அதாவது லாஸ் ஏஞ்சல்ஸ் மேற்கு புறநகர்ப்பகுதியில் பனிமூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டிருந்தது. இந்நிலையில் சிக்ரோஸி 76 என்ற ஹெலிகாப்டரில் தன்னுடைய மகள் கியானா(வயது 13 )உடன் இணைந்து கோப் பயணித்திருக்கிறார்.

 கட்டுக்கடங்காத பனி மூட்டத்தின் காரணமாக இயக்குனர் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கிய தீ பிடித்து இருக்கிறது. விபத்தில் சிக்கிய கோப் மற்றும் அவரது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . மேலும் அவர்களோடு பயணித்த மற்ற ஏழு பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இவரது இழப்பு விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இவர் ஹெலிகாப்டர் விபத்தில் தான் உயிர் இழப்பார் என்று ஒரு அமானுஷ்ய மனிதர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார். 

அதாவது கடந்த 2012ஆம் ஆண்டு, நவம்பர் 14ஆம் தேதி , டாட்நோசோ என்ற பயனாளி தனது ட்விட்டர் பக்கத்தில் கோப் அவர்களின் மரணத்தைப்பற்றி கணிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் . அதாவது அவர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தான் உயிரிழப்பார் என்று எட்டு வருடங்களுக்கு முன்பாகவே துல்லியமாக கணித்து அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவாக வெளியிட்டிருந்தார். இந்த பதிவை வெளியிட்ட போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட பதிவில் கூறியதை போல் தற்போது துல்லியமாக நடந்து இருப்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையவாசிகள் பலரும் யார் அந்த அமானுஷ்ய நபர் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.