திருமணமான 26 நாட்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது ஆரல்வாய்மொழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி வெறும் 24 நாள்! செய்யக்கூடாததை செய்த மனைவி! கணவன் எடுத்த பகீர் முடிவு! அதிர்ச்சியில் உறவினர்கள்!
நாகர்கோவில் மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட வடக்கூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மேகலிங்கம். மேகலிங்கத்தின் வயது 30. பொத்தேரி யில் உள்ள அரசு வங்கியில் மேகலிங்கம் ஊழியராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் 3-ஆம் தேதியன்று இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் ஆரல்வாய்மொழி பகுதியில் வசித்து வந்தனர். திருமணமான தொடக்கத்திலிருந்தே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தன. ஆகையால் இருவரும் மனம் உடைந்து போயினர். இந்நிலையில் நாளை மறுநாள் மேகலிங்கத்தின் மனைவியின் சகோதரருக்கு திருமணம் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக நேற்று மேகத்தின் மனைவி தன் சொந்த ஊருக்கு தனியாக சென்றுள்ளார். மனைவி தனியாக சென்றது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கல்யாணம் ஆன புதிதில் மனைவி இப்படி தனியே செல்லலாமா? என்கிற கேள்வி அவரை டென்சன் ஆக்கியுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு தூங்குவதற்காக மேகலிங்கம் தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் மறுநாள் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகித்த உறவினர்கள் அவருடைய அறையின் கதவை உடைத்துக்கொண்டு சென்றனர்.
அப்போதுஅவர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்ட உறவினர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ஆரல்வாய்மொழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது