கடன் எவ்வளவு வேணும்..! பெண் வாடிக்கையாளர்களை மயக்கி ஆசை நாயகிகளாக்கிய பேங்க் மேனேஜர்..! புதுக்கோட்டை பரபரப்பு!

புதுக்கோட்டையில் வங்கியில் பணியாற்றி வரும் காதலர் ஒருவர் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் தன்னுடன் வேலை பார்க்கும் ஊழியர்களுடன் ஆபாசமாக வீடியோ எடுத்து உல்லாசமாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டம் மணப்பாறை  கிராமத்தில் மஸ்தான் தெரு அமைந்துள்ளது. இங்கு லூயிஸ்விக்டர் மற்றும் லில்லிஹைடா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் எட்வின் ஜெயகுமார் (வயது 36). 

எட்வின் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தஞ்சை வல்லம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 2019 ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. வரதட்சணையாக ரூபாய் 5 லட்சம் மதிப்புடைய பொருள்களும் மற்றும் 25 பவுன் நகையும் வழங்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த பின்பு எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் மணப்பாறையில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். திருமணம் நடந்து முடிந்தது க்கு பின்பு தன்னுடைய மனைவியுடன் நெருங்கி பழகவில்லை. சந்தேகமடைந்த அவரது மனைவி தன்னுடைய கணவரின் நடவடிக்கைகளை உற்றுநோக்கி வந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் எட்வின் தன்னிடம் 15க்கும் மேற்பட்ட செல்போன்களை வைத்துக்கொண்டு அதில் வாட்ஸ்அப் மூலம் பலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் இருந்துள்ளார் . இதனை கண்டு அவர்கள் உறவில் மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த அவர் தன் கணவரிடம் இதனைப் பற்றி கேட்டிருக்கிறார்.

அப்போது எட்வின் மனைவி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து இருக்கிறார் . அது மட்டும் இல்லாமல் இதனை பற்றி தன்னிடம் கேள்வி கேட்கக் கூடாது எனவும் மிரட்டியிருக்கிறார். உடனே எட்வின் இன் மனைவி மாமியாரிடம் நடந்த அனைத்தையும் பற்றி கூறுவதற்காக சென்றிருக்கிறார்.

அப்போது அவரது மாமியார் அந்தப் பெண்ணை சண்டையிட்டு சத்தம் போட்டு அனுப்பி இருக்கிறார். மேலும் தன் மகனைப் பற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டியிருக்கிறார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கு சந்தேகம் அதிகரித்துள்ளது.

ஆகையால் தன் கணவர் உறங்கிய பின்பு அவரிடம் இருந்த செல்போனை எடுத்து அதில் அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்திகளை படித்துப் பார்த்திருக்கிறார். மேலும் அந்த செல்போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். செல்போனில் எட்வின் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்துள்ளன.

அந்தப் பெண் பாரத்த வீடியோக்களும் புகைப்படங்களும் பற்றிய தன் மாமியாரிடம் கூறுவதற்காக சென்றிருக்கிறார். அப்போது அவரது மாமியார் லில்லி ஐடா வேறு ஒரு பெண்ணுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். செய்வதறியாது திகைத்துப் போயிருந்த சமயத்தில் தன் பெற்றோரிடம் நடந்தவற்றை கூறலாம் என முடிவெடுத்திருக்கிறார்.

தன் மனைவிக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என்பதை அறிந்துகொண்ட எட்வின் அவரிடம் கோபப்பட்டு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனைப் பற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது எனவும் கூறியிருக்கிறார். இதனால் உயிருக்கு பயந்து அந்த பெண் வெளியே யாரிடமும் கூறாமல் மறைத்து இருக்கிறார்.

தேவி பிலோமினா என்ற பெண் தன் கணவருடன் வங்கியில் பணியாற்றி வருபவர் என்பதை அவர் கண்டறிந்தார். மேலும் அவருக்கும் அவருடைய கணவருக்கும் இடையில் வழக்கம் உள்ளது. அந்த பெண்தான் தன் கணவருக்கு இந்த ஆபாச விஷயங்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பதையும் இவர் கண்டறிந்திருக்கிறார்.

இதனையடுத்து தேவி பிலோமினா எட்வின் மனைவியிடம் சென்று எங்களைப் பற்றி வெளியே கூறினால் உன்னை சும்மா விட மாட்டோம் என்று மிரட்டி இருக்கிறார் அது மட்டுமில்லாமல் உன்னை ஆபாசமாக நாங்கள் வீடியோக்களும் புகைப்படமும் எடுத்து வைத்திருக்கிறோம் ஒருவேளை எங்களைப் பற்றி யாரிடமாவது கூற நினைத்தால் அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்.

இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் உடனடியாக தன்னுடைய தந்தைக்கு நடந்ததை பற்றி கூறியிருக்கிறார். பதறியடித்துக் கொண்டு வந்த அவர் மாப்பிள்ளை வீட்டாரிடம் நியாயம் கேட்டு இருக்கிறார். அவர்கள் யாரும் சரியாக அவருக்கு பதில் கூறவில்லை.

பின்னர் எட்வின் தன்னைப்பற்றி எல்லா உண்மைகளையும் அறிந்து கொண்ட மனைவியை கொலை செய்துவிடலாம் என திட்டமிட்டிருக்கிறார். அவரது மனைவியை கடந்த மாதம் 3-ம் தேதி புத்தாநத்ததில் உள்ள தேவாலயத்திற்கு அழைத்து செல்வதாக கூறி மலையேரிப்பட்டிக்கு அழைத்து சென்று கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.

எட்வின் இதேபோல் இரண்டு முறை தன் மனைவியை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். கடைசியாக ஒரு முயற்சித்த பொழுது அவரது மனைவி அங்கிருந்து தப்பித்து விட்டார். உடனடியாக தன்னுடைய பெற்றோரிடம் சென்று இந்த அநீதியைப் பற்றி கூறியிருக்கிறார்.

உடனே அந்த பெண்ணின் தந்தை தன் மகளுடன் சென்று வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் போலீசார் இந்த வழக்கை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டனர் ஆகையால். அந்த பகுதி டிஐஜி லோகநாதன் என்பவரிடம் சென்று புகார் அளித்திருக்கிறார்.

புகாரை பெற்றுக் கொண்ட அவர் இந்த வழக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வல்லம் அனைத்து மகளிர் காவல். நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். அவரின் உத்தரவின் பேரில் போலீசார் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். தன் மனைவி புகார் அளித்துள்ளார் என்பதை அறிந்து கொண்ட பின் உடனடியாக முன்ஜாமீன் பெற்று இருக்கிறார்.

கடைசியில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் வெளியே வரமுடியாத அளவிற்கு மிகவும் அழுத்தமான வழக்குகளை எட்வின் மீது பதிவு செய்துள்ளனர். இதனால் எட்வின் குற்றத்திலிருந்து தப்பிக்க இயலாது. தற்பொழுது போலீசார் எட்வின் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.