மதுபான விடுதியில் கெட்ட ஆட்டம்! தகாத செயல்! 74 பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

பெங்களூருவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நடத்திய ரெய்டில்,53 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 74 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


டோம்லுர் பகுதியில் உள்ள மது விடுதி ஒன்றில் ஆபாச நடனம் நடத்தப்படுவதாகவும், அந்த பெண்களுடன் நடனமாடவும், அவர்கள் மீது பணமழை வாரி இறைக்கவும், அவர்களுடன் ஜல்சா செய்யவும் விரும்பும் வாடிக்கையாளர்களிடம் விதவிதமான வகையில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், கடந்த வெள்ளியன்று அங்கு அதிரடி சோதனை நடத்திய போலீசார்,  அங்கு ஆபாச நடனமாடிய 74 பெண்களை மீட்டனர். அவர்களுக்கு சம்பளம் கொடுத்து, இத்தகைய இழி செயலில் ஈடுபடும்படி, மதுபான விடுதியின் நிர்வாகம் அறிவுறுத்தியதாக, விசாரணையில் தெரியவந்தது.

இதன்பேரில், அந்த விடுதியின் மேனேஜர், கேஷியர் மற்றும் அங்கிருந்த வாடிக்கையாளர்கள என மொத்தம் 53 பேரை போலீசார் கைது செய்தனர். ஆபாச நடனம் நடத்துவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. 

மது விடுதிகளில் இத்தகைய செயல்கள் நடைபெறுகின்றன. அதுதவிர, விபசாரமும், போதைப்பொருள் பழக்கமும் தங்கு தடையின்றி செய்யப்படுவதால், தீவிர கண்காணிப்பை நடத்தி வருவதாக, போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.