திடீர்னு ஒரு நாள் அஞ்சலியை கூட்டிட்டு ஜெய் ஓடிட்டார்..! தயாரிப்பாளர் வெளியிட்ட சூட்டிங் ஸ்பாட் சீக்ரெட்!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெய் ஆவார்.


நடிகர் ஜெய்யும் நடிகை அஞ்சலியும் இனைந்து பலூன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தை இயக்குனர் சினிஷ் இயக்கியிருந்தார். மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நந்தகுமார் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

தயாரிப்பாளர் நந்தகுமார் பலூன் திரைப்படத்தை தயாரித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் . அப்போது பேசிய அவர் பலூன் திரைப்பட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றபோது . நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலி இருவருக்கும் தேவையான எல்லா வித வசதிகளும் செய்து தரப்பட்டதாக கூறினார்.

படப்பிடிப்பின்போது இயக்குனர் சினிஷ் எடுக்கவிருக்கும் ஒரு காட்சியைப் பற்றி நடிகையின் அஞ்சலியிடம் கூறிக் கொண்டே இருந்திருக்கிறார் . அப்போது எதார்த்தமாக இயக்குனர் சினிஷ், நடிகை அஞ்சலியை பெயரிட்டு கூப்பிட்டு இருக்கிறார் . இதனை பார்த்து நடிகர் ஜெய் மிகுந்த கோபம் அடைந்துள்ளார் . உடனே அவர் இயக்குனர் சினிஷை பார்த்து நீங்கள் அவர்களை அஞ்சலி மேடம் என்று தான் அழைக்க வேண்டும் என்று கடும் கோபத்துடன் கூறியிருக்கிறார்.

மறுநாள் காலை கொடைக்கானல் மலையில் பலூன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அனைவரும் நடிகை அஞ்சலி மற்றும் ஜெய் இருவருக்காக காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் வெகு நேரமாகியும் அவர்கள் வராததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து ஜெய் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் எவரிடமும் கூறாமல் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு கிளம்பி இருக்கின்றனர். இதனால் பலூன் திரைப்படக்குழுவினர் மிகவும் வேதனை அடைந்ததாகவும் தயாரிப்பாளர் நந்தகுமார் கூறினார். இது மட்டும் இல்லாமல் பலூன் திரைப்படத்தில் புரோமோஷன் பணியிலும் தான் பங்கேற்க முடியாது எனவும் கூறினாராம் நடிகர் ஜெய்.

பின்னர் இருக்கும் நிலைமையை எடுத்துக்கூறி அவரை ப்ரோமோஷன் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறார் தயாரிப்பாளர் நந்தகுமார். இந்த ஒரே ஒரு பலூன் திரைப்படம் தயாரிப்பதற்கு தான் பெரும்பாடு பட்டதாகவும் இனி தயாரிப்பாளர் பணியை தான் செய்யக்கூடாது எனவும் முடிவு எடுத்ததாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.