அமெரிக்க படைகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மழை! அசராமல் அடித்த ஈரான்..! அதிர்ச்சியில் டிரம்ப்! பதற்றத்தில் வளைகுடா!

அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது புதிய ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான் அரசு. இதனால், அப்பகுதியில் போர்முனை பதட்டம் நிலவி வருகிறது.


ஈராக் நாட்டில் அன்பர் மாகாணம் மற்றும் தெஹ்ரான் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ படைத்தளத்தின் மீது ஏவுகணைகள் மூலம் சுமார் பத்திற்கும் மேற்பட்ட ராக்கெடுகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான் ராணுவம்.

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், "விரைவில் எங்களது நாட்டின் மீது நடத்தும் தாக்குதலை விட்டு விட்டு தப்பி ஓடி விடுங்கள்!" என பதிவிட்டிருந்தார்.

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவ படையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பொருட் சேதங்கள் நிறைய ஏற்பட்டு இருக்கின்றன. ஆனால் உயிர் சேதங்கள் மிகக்குறைவாகவே என தெரிவித்திருந்தார். 

இந்த தாக்குதலுக்கு பிறகு ஐஆர்ஜிசி ராணுவ படை தளபதி வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தங்களது படைகளை விரைவில் எங்களது நாட்டில் இருந்து திரும்பப் பெற வேண்டும். இதற்குமேல் ஈரான் எல்லைக்குள் அவர்களது தாக்குதல் நடத்தக்கூடாது என எச்சரித்தார்.

இந்த தாக்குதலானது இரண்டு கட்டமாக நடைபெற்றுள்ளது. சுமார் ஒரு மணி நேர இடைவெளிகளில் அடுத்தடுத்து இந்த இரண்டு தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரான் அரசு தாக்குதலை நடத்திய பிறகு அதற்கான வீடியோ பதிவினை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.