சிறுத்தை கார்த்தி மகளா இவர்? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? ஒய்யாரமாக ராம்ப் வால்க் வரும் புகைப்படம் உள்ளே!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை திரைப்படத்தில் அவரது மகளாக நடித்த பேபி ரக்ஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.


தமிழ்சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி ஆவார். இதனைத்தொடர்ந்து பல திரைப் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததன் மூலமாக அனைவருக்கும் பிடித்தமான நடிகராகவும் மாறி உள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி தமன்னா சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்த சிறுத்தை இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெறும் கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷா நடித்திருப்பார்.

இந்த சிறுத்தை திரைப்படத்தில் பேபி ரக்ஷாவின் நடிப்பு பாராட்ட தக்கதாக இருந்தது. இதற்குப் பின்பு நடிகர் விஷால் ஜெயம்ரவி, சரத்குமார், போன்ற முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். சமீப காலமாகவே பேபி ராசாவை பற்றி எந்த ஒரு தகவலும் சமூக வலைதளத்தில் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் அவரைப்பற்றிய சமீபத்திய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவ ஆரம்பித்திருக்கிறது. அதாவது பேபி ரக்ஷா சமீபத்தில் நிகழ்ந்த அழகுப் போட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் பேபி ரக்ஷா ஒய்யாரமாக ராம்ப் வாக் செய்கிறார். பார்ப்பதற்கு அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கும் அவர் தமிழ்சினிமாவில் வருங்காலத்தில் கதாநாயகியாக கூட வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பேபி ரக்ஷா அழகுப் போட்டியில் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகின்றன. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குழந்தையா இது? என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.