குழந்தைக்கு விக்கல்

சின்னக் குழந்தைகளுக்கு திடீரென விக்கல் வரும்போது, தாய்க்கு இனம்புரியாத அச்சம் ஏற்படுவதுண்டு. ஏனென்றால் விக்கலை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் தவிப்பாள். வீட்டில் பெரியவர்கள் சொல்லுவதுபோல், சின்னக் குச்சி அல்லது நூலை எடுத்து தலையில் வைக்கும் மூடநம்பிக்கையை மேற்கொள்வாள். இதனால் விக்கல் நிற்காது என்பது தாய்க்கு புரியவேண்டும்.


·         பசி ஏற்படுவதால் சில குழந்தைகளுக்கு விக்கல் வருவதுண்டு. அதனால் தண்ணீர் கொடுத்தால் விக்கல் நிற்கலாம். ஆனால் இந்தப் பிரச்னை ஏற்படாமல், பசிக்கும் முன்னரே பால் கொடுப்பது நல்லது.

·         ஏப்பம் போலவே விக்கலும் அதிகப்படியான காற்றை உட்கொள்வதால் ஏற்படுவதுண்டு. அதனால் தோளில் அல்லது காலில் குழந்தையைப் போட்டு முதுகில் தட்டிக்கொடுத்தால் விக்கல் நின்றுவிடும்.

·         நேரம் கழித்து சாப்பிடுவது, அதிக கிழங்கு வகைகளை உட்கொள்வது, ஜீரணம் ஆகாமை போன்ற பிரச்னைகள் தாய்க்கு இருக்கும்போது, பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்றில் காற்று சேர்ந்து விக்கல் வரலாம்.

·         குழந்தை விக்கல் எடுப்பதைக் கண்டு தாய் அச்சப்படாமல் ரிலாக்ஸ் ஆக, நம்பிக்கையுடன் இருந்தாலே, குழந்தையின் விக்கல் விரைவில் தானாகவே நின்றுவிடும்.

தாய்ப்பால் கொடுக்கும்போது விக்கல் ஏற்பட்டால் உடனடியாக தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது நல்லது. தொடரும் பட்சத்தில் குழந்தை வாந்தி எடுக்கலாம். இது மேலும் அவஸ்தையை உருவாக்கிவிடும்.