இனி இந்த நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால் பேச முடியாது!

பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு நிறுவனமானது தன்னுடைய அன்லிமிடெட் கால் முகாந்திரத்தை ரத்து செய்துள்ள செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது போட்டி போட்டு கொண்டு செயல்படுகின்றன. அன்னமிட்ட கால்கள் மற்றும் இணையத்தள வசதிகளை நுகர்வோர்களுக்கு அளித்து லாபத்தை ஈட்ட குறிக்கோளாக உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல் நிறுவனமானது பல்வேறு சலுகைகளை நுகர்வோர்களுக்கு அளித்து வந்தது. நுகர்வோர்களை ஈர்ப்பதற்காக அன்லிமிட்டட் கால்கள் மற்றும் இணையதள வசதியை அளித்தது. அது நினைத்த அளவிற்கு லாபத்தை ஈட்டவில்லை என்பதால் தற்போது அந்த முடிவிலிருந்து நிறுவனமானது சற்று பின்வாங்கியுள்ளது.

காம்போ ஃஆப்பர்களை தேர்வு செய்யும் நுகர்வோருக்கு 250 நிமிடங்களுக்கு இலவச கால் வசதியை அளித்துள்ளது. 250 நிமிடங்களை எட்டிவிட்டால், அதன் பிறகு நள்ளிரவு வரை மேற்கொள்ளும் அனைத்து கால்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். பின்னர் நள்ளிரவு முதல் இலவச கால்களின் பேலண்ஸ் அப்டேட் ஆகிவிடும்.

பி.எஸ்.என்.எல் சில மாதங்களாகவே நஷ்டத்தை அடைந்து வருவதால் இந்த அபாயகரமான முடிவினை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இது பி.எஸ்.என்.எல்லின் நுகர்வோர்களை பெரிதளவில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்த முடிவின் மூலம் நிறுவனம் தன்னுடைய லாபத்தையும் சிறிதளவிலாவது உயர்த்திக்கொள்ள வழி பிறக்கும் என்கின்றனர் நிதிநிலை ஆய்வாளர்கள்.

நிறுவனத்தின் போட்டியாளர்களான ஏர்டெல் மட்டும் வோடபோன் குறைந்த அளவு ரீசார்ஜை கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் பெரிய ஃஆப்பர்களில் அன்லிமிடெட் கால் மற்றும் இணையதள வசதியை உறுதி செய்துள்ளனர். ஜியோ குறைந்தளவு ரீசார்ஜ் போன்ற எதையும் அணுகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த முடிவானது பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு எந்த வகையிலும் செல்லலாம் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.