வைகோ எம்பி பதவிக்கு ஆப்பு! டெல்லியில் தயாராகும் பாஜகவின் பலே பிளான்!

ஒரு வழியாக ராஜ்யசபா எம்.பி. மனு தேர்வாகிவிட்டது, இனிமேல் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பதவி ஏற்றுக்கொள்ளலாம் என்று வைகோ தயாராகி வருகிறார்


கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்துக்கு செல்லும் ஆர்வத்தில் இருக்கிறார். ஆனால், அவரை நாடாளுமன்றத்தில் பதவியேற்க விட மாட்டோம் என்று பா.ஜ.க.வினர் உறுதியாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், கோ பேக் மோடி என்பதை தமிழகம் முழுவதும் கொண்டுசென்றவரும், போராடியவரும் வைகோ மட்டும்தான்.

அதனால், அவரை நிச்சயம் பதவி ஏற்க விட மாட்டோம் என்று சொல்லும் பா.ஜ.க.வினர் அதற்காக சட்டப் புத்தகத்தை ஒரு வரி விடாமல் படித்துவருகிறார்கள். ‘ஒரு தேசத்துரோகியை நாடாளுமன்றத்தில் அனுமதிப்பது தவறு’ என்று ஜனாதிபதியிடம் புகார் கொடுக்க இருக்கிறார்கள். 

தேச துரோகம் செய்ததற்காக குற்றம் செய்யப்பட்டது மட்டுமின்றி, அதே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வேன் என்று வைகோ கொந்தளித்திருப்பதால் மீண்டும் இதேபோன்று பேசி நம் நாட்டை அவமானப்படுத்துவார் என்கிறார்கள். வைகோ பதவி ஏற்பது நாட்டுக்கு அவமானம் என்பதை பெரிய அளவுக்கு கொண்டுசெல்லவும் பா.ஜ.க. தயாராக இருக்கிறதாம். என்ன செய்றது, வைகோ ராசி அப்படி!