அழகிரியை பொதுவேட்பாளராக நிறுத்த பா.ஜ.க. திட்டம்! ஒரு வாரம் டயம் வாங்கிய கனிமொழி! திகிலில் ஸ்டாலின்!

இன்னும் ஒரு வாரத்தில் என்னுடைய நிலையை அறிவிப்பேன் என்று அழகிரி அறிவித்ததன் பின்னணியில் பாரதிய ஜனதாவின் கைங்கர்யம் இருப்பதாக தகவல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.


இதுவரை தி.மு.க.வின் தோல்வி குறித்து அழகிரி சொன்னது எல்லாமே அப்படியே நடந்துவருகிறது. ஸ்டாலின் மீது கொலைவெறியில் இருக்கும் அழகிரியை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் திட்டம். இதுகுறித்து அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த சூழலில் அ.தி.மு.க. + பா.ஜ.க. கூட்டணியில் ஏதேனும் ஒரு தொகுதியில் அழகிரியை நிறுத்தவேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. தயாநிதி மாறன், ஆ.ராசா, துரைமுருகனின் மகன், பொன்முடியின் மகன், கனிமொழி ஆகிய ஐந்து தொகுதிகளை குறி வைத்துள்ளனர்.

பேச்சுவார்த்தை ஒத்துவரும் பட்சத்தில் கனிமொழியாக இருந்தாலும் பரவாயில்லை, மேற்கண்ட ஏதாவது ஒரு தொகுதியில் எதிர்த்துநின்று வெற்றிபெறுவேன் என்று லோக்கல் தலைவர்களிடம் உறுதி அளித்திருக்கிறாராம் அழகிரி. இந்தத் தகவல் தெரிந்து கனிமொழி அவசரமாக தூது போயிருக்கிறார். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துவிட வேண்டாம், ஸ்டாலினிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று கேட்டுக்கொண்டாராம். அதனால்தான் ஒரு வாரம் கெடு விதித்திருக்கிறார் அழகிரி. தகவல் அறிந்து கொதித்துக்கிடக்கிறார் ஸ்டாலின்.

களத்தில் அழகிரி இறங்கிட்டா சும்மா ஹாட்தான்.