தமிழகத்தில் பிஜேபிக்கு ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க டெல்லி கட்டளை - காமெடி டைம் ஸ்டார்ட்ஸ் - என்ஜாய் மக்களே

பிஜேபியின் புதிய செயல் தலைவர் ஜே.பி நட்டா இந்தியாவெங்கும் தங்கள் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப் படுத்தும்படி உத்தரவிட்டு இருக்கிறார்.


100 பேரை உறுப்பினர் ஆக்குவோர் தீவிர உறுப்பினர் என்கிற அந்தஸ்தை பெறுவார்கள்.அப்படிப் பட்ட தீவிர உறுப்பினர்களுக்குத்தான் கட்சிப் பதவி வழங்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் பிஜேபி பெருந்தலைகள் பரபரப்பாக களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.வழக்கம் போல தமிழகத்தில் இது காமெடியாகவே பார்க்கப் படுகிறது.

தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனால் ஓரம் கட்டப்பட்ட எஸ்.வி சேகர் துவங்கிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஒரு ஆண்டி இண்டியன் நாய் நுழைந்து வைரலான ஃபோட்டோவை பார்த்திருப்பீர்கள். இந்த நிலையில் பிஜேபியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்னும் களத்தில் இறங்கவே இல்லை என்கிற செய்தி தமிழிசைக்கு கிடைத்திருக்கிறது.கட்சித் தலைமையின் உத்திரவை சுட்டிக்காட்டி ஹெச்.ராஜாவை விரட்டி இருக்கிறார் தமிழிசை.என் ஆதரவாளர்கள் களத்தில் இருக்கிறார்கள், நான் கண்காணித்துக் கொண்டு இருக்கிறேன் என்கிற ராஜாவின் பதிலை தமிழிசை ஏற்றுக் கொள்ளாததால் ராஜா வேண்டா வெறுப்பாக களமிறங்கி இருக்கிறார்.

சூரியாவையும் சூரியையும் மிரட்டி எல்லாம் தமிழ் நாட்டில் பிஜேபியை வளர்க்க முடியாது என்கிற பிராக்டிக்கல் பிராப்ளம் புரிந்திருந்தாலும் மேலிடத்து உத்தரவுக்கு பயந்து தமிழக பிஜேபி பெருந்தலைகள் உறுப்பினர் சேர்க்கையில் இறங்கி இருக்வாக்களிக்க.ஏழு கோடி தமிழக வேட்பாளர்களில் ஒரு கோடி பேர் வாக்களிக்க வராதவர்கள்.திமுக, அதிமுக இரண்டும் சேர்ந்து 4 கோடி உறுப்பினர்கள் என்றால்,மீதமுள்ள 2! கோடி பேரில் ,காங்கிரஸ், விசிக,பாமக,இரண்டு கம்யூனிஸ்ட் காட்சிகள் இதற ஜாதி காட்சிகள் போக பத்துலட்சம் பேர் தேறுவதே கடினம்,இதில் பிஜேபி எப்படி ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க முடியும் என்பது தமிழக பிஜேபி தலைவர்களுக்குத் தெரியும்.

ஆனாலும் , டெல்லி தலைமையின் பேராசையை எண்ணி எண்ணி சிரித்தபடிதான் இயங்குகிறாரகாலம்ஆணாலும் உள்ளூர் ஈகோ மோதல்களுக்கு இதை வடிகாலாகப் பயண்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். பிஜேபிக்கு தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் என்கிற பிஜேபியின் கனவு நிறைவேறும் காலம் அருகில் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்வரை இந்தக் காமெடி தொடத்தான் செய்யும்