திருச்சியில் பட்டப் பகலில் வெட்டி கூறு போடப்பட்ட பாஜக பிரமுகர்..! அதிர வைக்கும் காரணம்!

பாஜக பிரமுகர் திருச்சியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சியில் உள்ள பாலக்கரை பகுதியில் மண்டல பாஜக செயலாளராக பதவி வகித்து வந்தவர் விஜயரகு ஆவார். இவர் இன்று அப்பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த மார்க்கெட் பகுதியில் மர்ம நபர்களால் மண்டல பாஜக செயலாளராக பதவி வகித்து வந்த விஜயரகு கொலை செய்யப்பட்டார். 

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த மார்க்கெட் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி உள்ள பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆகையால் தொண்டர்கள் பலர் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

மண்டல பாஜக செயலாளர் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.