மத துவேஷம்: பா.ஜ.க கல்யாண ராமன் கைது!!

பாஜக பிரமுகர் கல்யாணராமனை சென்னை விமான நிலையத்தில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் கல்யாணராமன். பாஜக பிரமுகரான இவர் காக்கைச் சித்தர் கல்யாணராமன் என்ற பெயரில் முகநூலில் உள்ளார்.

அவரது முகநூலில் தொடர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக  கல்யாணராமன் மீது பல புகார்கள் சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் வந்துள்ளது. 

இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கல்யாணராமன் முகநூலை சரி பார்த்து புகாரை உறுதி செய்து கொண்டு, கல்யாணராமன் மீது 153a, 295, 505  உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தனர். 

இன்று காலை அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு சிட்லபாக்கம் போலீசார் இதே காரணங்களுக்காக கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.