பா.ஜ.க. புதிய தலைவர் நியமனத்துக்கு கடும் அதிருப்தி!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழிசை சௌந்தர்ராஜன் பாரதிய ஜனதா தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொறுப்பு நிரப்பப்படாமல் இருந்துவந்தது.


கடந்த சில நாட்களாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொறுப்புக்கு விரைவில் தலைவர் நியமிக்கப் பட உள்ளதாக தெரிவித்திருந்தார் அதன் தேசிய தலைவர் ஜேபி நட்டா. இந்நிலையில் இன்று மாலை தமிழக பாரதிய ஜனதா தலைவராக தேசியத் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் துறையில் பணியாற்றி வரும் திரு. எல். முருகன் என்பவர் தமிழக பாரதிய ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல். கணேசன் தமிழக பாரதிய ஜனதா தலைவராக பொறுப்பு வகித்த வேலையில். எச். ராஜா. நயினார் நாகேந்திரன். மாலன் நாராயணன் மற்றும் வானதி சீனிவாசன் எல் கணேசன் என அதன் முக்கியத் தலைவர்கள் அனைவரும் தமிழக பாரதிய ஜனதா மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தினமும் வருகை தந்தனர். 

 தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாரதிய ஜனதா தலைவராக அறிவித்த பிறகு அதன் முக்கிய தலைவர்கள் கமலாலயத்திற்கு வருவதை குறைத்துக் கொண்டனர். வர்ண அடிப்படையில் தங்களுக்கு கீழ் பிறந்தவர்கள் தலைமையேற்று உள்ள அலுவலகத்திற்கு தங்களது புனிதப் பாதங்கள் படாத வண்ணம் பார்த்துக் கொண்டனர் இதன் முதல் கட்ட தலைவர்கள். 

அதற்கு பிறகு தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் துறையில் பணியாற்றி வரும் எல் முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக பாஜக தலைமை மாநில தலைவரை அறிவித்த பிறகும் கூட. அந்த அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தங்களது புதிய தலைவரை காண முதற்கட்ட தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்கள் கூட வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.