பா ஜ க யாருடன் கூட்டணி? விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு! தமிழிசை செளந்தரராஜன் பேட்டி!

தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.


தொழிலாளர் நலனுக்காக குரல் கொடுத்த சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 160வது பிறந்தாநாளை முன்னிட்டு  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை :

ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை வரவேற்கத்தக்க ஒன்று. ஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மறைமுகமாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கும் அவர்கள் வாழ்வாதாரம் உறுதி செய்யும் வகையில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை போல்  எதிர்கட்சி முதல்வர்கள் இப்படியே போராட்டத்தை நடத்துவதே வாடிக்கையாக உள்ளனர். நாராயணசாமி பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுக்கிறார். 

ஸ்டாலின்,திருமாவளவன்,அரவிந்த் கெஜிர்வால் போன்றவர்கள் நாராயணசாமிக்கு ஆதரவு தருகின்றனர். புதுவையில் முதல்வர் எதை பற்றியும் கவலைப்படாமல் தன்னை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு உள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தை ஏறக்குறைய பேச்சுவார்த்தை நிறைவடையும் தருணத்தில் உள்ளது, நல்ல கட்சிகளுடன் மெகா கூட்டணியாக அமையும்.

ஓரிரு நாளில் பாஜக கூட்டணி குறித்தும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகும். பியூஷ் கோயல் ஓரிரு நாளில் தமிழகம் வரவுள்ளார் கூட்டணி குறித்து இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விரைவில் கூட்டணி குறித்து தகவல் வெளியிடப்படும்.

இவ்வாறு தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார்.