அரசியல் பரபரப்பு! நடிகரின் கட்சியில் இணையும் பிரபல எம்.எல்.ஏ!

எம்.எல்.ஏ ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு நடிகரின் கடசியில் இணைய உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும் பாஜக.,வுக்கு எதிராக விமர்சனங்கள் வலுத்து வருகிறது. அத்துடன், பல்வேறு மாநிலங்களிலும் பாஜக எம்எல்ஏ.,கள், எம்பி.,க்கள் சிலர் மேலிடத்துடன் ஏற்பட்ட அதிருப்தியால் பதவியை ராஜினாமா செய்வது தொடர்கதையாகியுள்ளது.

 

இதன் ஒருபகுதியாக, ஆந்திராவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ அகுலா சத்யநாராயணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆந்திர சட்டமன்ற சபாநாயகர் கோடெல சிவ பிரசாத்திடம் ராஜினமா கடிதத்தையும் அவர் அளித்துள்ளார். 

 

மேலும், கட்சியில் இருந்தே விலகுவதாகக் கூறி, பாஜக ஆந்திர தலைவர் கண்ணா லஷ்மிநாராயணாவுக்கு, ஃபேக்ஸ் மூலமாக, அவர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அகுலா சத்யநாராயணா, நடிகர் பவன் கல்யாண் நடத்தி வரும் ஜன சேனா கட்சியில் இணைய உள்ளதாக, தெரியவந்துள்ளது. 

 

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தான் வெற்றிபெற்றதற்கு, ஜன சேனாவின் தீவிர பிரசாரமே காரணம் என்று, அகுலா சத்யநாராயணா நம்புகிறார். அத்துடன் ஜனசேனா கட்சியுடன், பாஜக.,வுக்கு அதிருப்தி நிலவி வரும் சூழலில், அவர் பவன் கல்யாண்கூட நட்பு பாராட்டுவது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதையடுத்தே தனது பதவியை சத்யநாராயணா ராஜினிமா செய்துள்ளார். அவருக்கு எம்பி தேர்தலில் போட்டியிடவும், அவரது மனைவிக்கு எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடவும் சீட் தருவதாக, பவன் கல்யாண் உறுதி அளித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.