என்ஜினியரிங் படிச்சவங்களுக்கு பள்ளிக் கூடத்தில் சூப்பர் வேலை! தமிழக அரசு அட்டகாச அறிவிப்பு!

இனி பொறியியல் படித்தவர்களும் டெட் தேர்வு எழுதி அரசு பள்ளியில் கணித ஆசிரியர் ஆகலாம் என என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


அரசுப்பள்ளியில் பணிபுரிவதற்கு பொதுவாக எழுதப்படும் டெட் தேர்வுகளில் பல குழப்பங்களில் இருந்து வந்தது. குறிப்பாக டெட் தேர்வு எழுதுவதற்கு இளங்கலைப் பட்டப்படிப்பு படித்துவிட்டு பி.எட் முடித்தவர்கள் மட்டுமே எழுத இயலும். ஆனால் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் பி.எட் மட்டுமே படிக்க இயலும். டெட் தேர்வு எழுத அனுமதி இல்லை.  

இந்நிலையில் அரசு தரப்பிற்கு டெட் தேர்விற்கு எழுதுவதற்கு நிகரான பட்டப்படிப்பு படித்தவர்கள் அனைவரையும் டெட் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதனை பரிசீலித்த பள்ளிக்கல்வித்துறை, தற்போது ஆலோசனை செய்து பி.எட் படிப்பிற்க்கு நிகரான பட்டப்படிப்பு கொண்டிருப்பவர்கள் அனைவரும் தேர்வு எழுதலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது.  

அதில் குறிப்பாக பி.இ முடித்த அனைவரும் இனி பி.எட் பட்டப்படிப்பை படிக்க தேவையில்லை. நேரடியாக டெட் தேர்வு எழுதி அரசு பள்ளிகளில் கணித ஆசிரியராக பணியாற்றலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.