வடமாநிலைத்தை சேர்ந்த பெண்ணுக்கு கோவையில் உள்ள ஆட்டோ ஓட்டுநனர் பிரசவம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது. இந்த செய்தியினை அவரது மகள் முகநூலில் பதிவு இட தற்போது அந்த பதிவு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றது.
ரத்தத்துடன் பனிக்குடம் உடைந்துவிட்டது..! தலை மட்டும் வெளியே தெரிந்தது..! வடமாநில கர்ப்பிணியை காப்பாற்றிய கோவை ஆட்டோ டிரைவர்!

கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பொது மக்கள் பசியாலும் வறுமையாலும் பலர் வேதனையடைந்துள்ளனர். இந்நிலையில், கோவையில் உள்ள ஆட்டோ சந்திரகுமார் என்பவர் பிரசவ வலியால் துடித்த ஒடிசா மாநிலத்தைப் சேர்ந்த பெண் ஒருவருக்குப் பிரசவம் பார்த்துள்ளார்
கடந்த 16-ம் தேதி காலையில் சமூக சேவகரான சந்திரகுமார் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள் கொடுப்பதற்தாக சென்றுள்ளார். அப்போது காமராஜர் சாலையில் உள்ள சி.பி.ஐ கட்சி அலுவலகம் அருகே ஒரு பெண் பிரசவ வலியில் துடித்துள்ளார். அதனை கண்ட ஆட்டோ ஓட்டுனர் உடனடியாக சி.பி.ஐ கட்சியின் தோழர் பழனிச்சாமி ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார்.
ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரம் எடுக்கும் என்பதால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்வது கடினம் என்பதாலும், மேலும், அந்தப் பெண்க்கு ரத்தக் கசிவு ஏற்பட்டு உள்ளது. அதனை பார்த்தபோது, ரத்தத்துடன் பனிக்குட நீரும் கலந்து வருவதை அறிந்த ஓட்டுனர் அக்கம் பக்கத்தினரிடம் உதவிக்கு அழைத்துள்ளார்.
ஆனால் அனைவரும் ரத்தத்தைப் பார்த்த பதற்றத்தில் இருந்ததால், யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்களை நம்பி தாமதிக்கக் கூடாது என்பதற்காக அவரே களத்தில் இறங்கி உள்ளார். முதலில் அந்தப் பெண் அவரை தடுத்தார். பின்னர் வட இந்தியப் பெண் என்பதால் இந்தியில் பேசி புரிய வைத்தார். பிறகு குழந்தையின் தலை வெளியே தெரிந்தது. அதனை தொடர்ந்து குழந்தையை வெளியில் எடுத்து அங்கேயே பிரசவம் பார்த்துள்ளார்.
பிரசவத்தில் அப்பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்குள் ஆம்புலன்ஸ் மூலம் டாக்டரே சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார். பின்னர் அவர் தொப்புள் கொடியை அறுத்தார். தாய் மற்றும் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த பெண்ணுடன் கணவரும் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஆட்டோ சந்திரனின் மகள், ஜீவா சந்திரகுமார் அவர்கள் தனது தந்தையை பற்றி அவரது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவுயிட்டுள்ளார். அந்த பதிவில் ``சிறு வயதில் இருந்தே எனது தந்தை பல விஷயங்களைக் கற்றுத் தருவதுடன் புதிது புதிதான அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார். இப்போது மற்றொரு புதிய அனுபவம் கிடைத்துள்ளது” என்று பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகின்றது. சமூகச் செயற்பாட்டாளர் ஆனா சந்திரகுமார் அவர்கள் விசாரணை படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான லாக் அப் நாவலின் ஆசிரியராக வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.