சாலையில் கத்தை கத்தையாக புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள்! கண்டெடுத்து ஆட்டோ ஓட்டுனர் செய்த நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டு!

சாலையில் கிடந்த 45 ஆயிரம் ரூபாயை பத்திரமாக பூட்டி வைத்த காவல்துறை அதிகாரிக்கு கூடலூரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன.


கூடலூர் நகராட்சியில் செம்பாலா அட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இவ்விடத்தில் ஜான்சன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றிவருகிறார். நேற்று காலை வழக்கம் போல 8 மணியளவில் ஜாக்சன் ஆட்டோ ஓட்ட தொடங்கியுள்ளார். பயணிகளை ஏற்றிக்கொண்டு செம்பாலாவிலிருந்து கூடலூருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் ரூபாய் நோட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிதறிய நோட்டுகளை ஒன்றாக சேர்த்து அடுக்கினார். அப்போது அதில் 45 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. தன்னுடைய பயணிகளை கூடலூரில் இறக்கிவிட்டு, சக ஆட்டோ ஓட்டுநர்களான தமிழ், கண்ணதாசன், மொரி, சியாபு, ஜீவா ஆகியோரை அழைத்துக்கொண்டு கூடலூர் காவல் நிலையத்திற்கு சென்றார்.

அங்கு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டரை சந்தித்து நடந்ததை கூறி 45 ஆயிரம் ரூபாயை தந்தார். இந்த விவகாரம் நடந்து கொண்டிருக்கும்போது செம்பாலா பகுதியில் ஒப்பந்ததாரராக பணிபுரியும் சிகாமணி என்பவர் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார்.

அப்போது அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது 45 ஆயிரம் ரூபாயை தவறிவிட்டதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அவர் கூறியதில் உள்ள உண்மை தன்மையை ஆராய்ந்த பின்னர் காவல்துறையினர் ஜாக்சன் கையாலேயே அவரிடம் 45 ஆயிரம் ரூபாயை வழங்கினர்.

இந்த சம்பவமானது கூடலூர் பகுதியில் உள்ள அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அனைத்து தரப்பினரும் ஜாக்சனை பாராட்டிய வண்ணமுள்ளனர்.