நடு ரோட்டில் உயிருக்கு துடிதுடித்த கன்று! காப்பாற்ற போராடிய தாய் பசு! திருச்சியை நெகிழ வைத்த சம்பவம்!

விபத்தில் சிக்கி அடிபட்ட கன்றுக்குட்டியை பிரிய மனமில்லாமல் தாய்ப்பசு அதனை தடவிக் கொடுத்த சம்பவம் திருச்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது .


திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார்புறத்திலிருந்து கே.கே நகருக்கு ஆட்டோ ஒன்று சென்றிருக்கிறது. அப்போது ஆட்டோவிற்கு நடுவில் கன்றுகுட்டி ஓடி வந்து விழுந்தது. இதனால் ஆட்டோ கன்றுகுட்டி மேல் மோதி கவிழ்ந்தது .

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சில காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் ஆட்டோவில் சிக்கி அடிபட்ட கன்றுகுட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்து கொண்டிருந்தது . மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த கன்று குட்டியின் தாய் பசுவானது அதன் அருகில் வந்து நாக்கால் தடவிக் கொடுத்த படி அருகில் நின்று கொண்டிருந்தது.

அதை பார்த்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுனரை ஆட்டோவில் இருந்து தூக்கி காப்பாற்றினார்கள் . அதேசமயம் கன்றுக்குட்டியும் காப்பாற்றி அருகிலிருந்த கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் . இந்த சம்பவமானது அந்த பகுதி மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.