2-வது குழந்தை பிறந்தால் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று ஜோசியர் கூறியதை நம்பி கருவை கொலை செய்த தந்தையை கலைத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
நல்லது நடக்கும்னு ஜோசியர் சொன்னார்! அதான்..! கர்ப்பிணி மனைவி வயிற்றில் ஓங்கி மிதித்து கருவை கலைத்த கணவன் கூறிய பகீர்!
முளியனூர் என்ற இடத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவியின் பெயர் ரம்யா. இத்தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த வண்ணமிருந்தன. இதனால் முனுசாமி மீது கோபித்து கொண்ட ரம்யா தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
ஒருவழியாக பெரியோர் அறிவுறுத்தியதன் காரணமாக சில நாட்கள் கழித்து ரம்யா மீண்டும் முனுசாமியுடன் குடும்பம் நடத்துவதற்காக முன்னுசாமியின் வீட்டுக்கு வந்துள்ளார். இதற்கிடையே ரம்யா கருவுற்றார். ஜோதிடர் ஒருவர் ரம்யா 2-வதாக குழந்தை பெற்றுக்கொண்டால் அது முனுசாமியின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று ஏற்கனவே இருவரிடமும் கூறியுள்ளார்.
அதனை முனுசாமி ரம்யாவிடம் ஞாபகப்படுத்தி கருவை கலைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் ரம்யா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முனுசாமி ரம்யாவின் வயிற்றிலேயே ஓங்கி எட்டி உதைத்துள்ளார். வலி தாங்காமல் அலறிய ரம்யாவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கரு ஏற்கனவே இறந்துவிட்டதாக ரம்யாவிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி காவல் நிலையத்தில் கருவை கொன்ற தன்னுடைய கணவர் மீது புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள முனுசாமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.