பூமியை நோக்கி வேகமாக வரும் பிரமாண்ட விண் கல்! தப்புமா மனித இனம்?

மிகப்பெரிய எரிக்கல் ஆகஸ்ட் மாதத்தில் உலகை தாக்கக்கூடும் என்று பல அறிவியல் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.


பூமியை ஆகஸ்ட் மாதத்தில் மிகப்பெரிய எரிகல் தாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த எரிகல்லின் பெயர்  "2019 OU1" என்பதாகும். இதன் குறுக்களவு 160 மீட்டராகும். இது வாஷிங்டன் சிலை அளவிற்கு பெரிதாகும்.

எகிப்து நாட்டின் புகழ்பெற்ற பிரமிடான கிஸாவை காட்டிலும் 20 மீட்டர்கள் உயரமானதாகும். இந்த எரிகல் ஆனது ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 18 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் அருகே வந்து செல்லும் என்று பல அறிவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

நாசா ஆய்வகம் நடத்திய ஆய்வுகளின் படி இந்த எரிக்கல்லானது பூமிக்கு மிக அருகே வந்து செல்லும். பிரிட்டன் நாட்டின் புகழ்பெற்ற வானியல் அறிஞரான மெக்டொனால்டு கூறுகையில், "பல அறிவியல் விஞ்ஞானிகள் எரிக்கற்கள் பூமியை தாக்கும்‌ என்று முற்காலங்களில் பலமுறை கூறியுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவற்றிலிருந்து பூமி தப்பியுள்ளது.

ஆனால் என்றாவது ஒருநாள் சக்தி வாய்ந்த எரிகல் பூமியை தாக்கப்போவது என்பது நிதர்சன உண்மை. அது ஏற்கனவே உலகத்தை தாக்கிய எரிகற்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாக அமையும். உலகிற்கே பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வல்லமை படைத்த எரிகற்களின் தாக்குதல் வரும் காலங்களில் நடைபெறுவது சாத்தியமாகும்" என்று கூறினார்.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.