ஜேகே ரித்தீஷ் கேட்ட தண்ணீரை எடுத்து வருவதற்குள் அவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்து விட்டதாக அவரது உறவினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தண்ணீர் கேட்டார்! எடுத்து வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது! கதறிய ஜேகே ரித்தீஷ் உறவினர்!

44 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு ஜேகே ரித்தீஷ் உயிரினங்கள் தான் தற்போதைய தமிழக சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் அனைவராலும் பேசப்படும் ஒரு விஷயம். உடற்பயிற்சி தியானம் என உடல் மீது அதிக கவனம் கொண்டிருந்த ரித்தீஷ்ஷ் மரணம் பலரையும் அதிர வைத்துள்ளது. ஜேகே ரித்தீஷ் மரணம் அடைந்ததை தற்போது வரை நம்ப முடியவில்லை என்கிறார் அவருடைய நெருங்கிய நண்பர் ஜே எஸ் கே சதீஷ்.
நண்பர் ஜேகே ரித்தீஷ் மரணம் குறித்து பேசிய விஜய் எஸ் கே சதீஷ், இப்படி ஒரு தகவலைக் கேட்டு நொறுங்கிப் போய் விட்டதாகவும் உடனடியாக இராமநாதபுரத்திலுள்ள ரித்தீஷின் உறவினரை தொடர்புக்கொண்டு என்ன நடந்தது என்று கேட்டதாகவும் சதீஷ் தெரிவித்துள்ளார். அப்போது அண்ணன் சாப்பிட்டு விட்டு தண்ணீர் கேட்டதாகவும் தண்ணீர் எடுத்து வருவதற்குள் திடீரென மயங்கி கிடந்ததாகவும் கூறியுள்ளார் அந்த உறவினர். இதனைப் பார்த்து அதிர்ந்து போய் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறியதாக சொல்லி அந்த உறவினர் ஜே எஸ் கே சதீஷிடம் கதறியுள்ளார்.