விபத்தில் சிக்கி மீண்ட அடுத்த நிமிடம்! மின்னல் வேகத்தில் வந்த பஸ்! நொடியில் 3 பேர் உயிர் போன பகீர் விபத்து!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இன்றைய தினம் விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்ஸில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


கேரளாவை சேர்ந்த சேகர் என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தார். வேளாங்கண்ணிக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு பின்னர் மீண்டும் அவர்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக செய்தல் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார் டயர் வெடித்து நின்று போனது.

ஆகையால் சேகர் தன்னுடைய குடும்பத்தினரை வேறு ஒரு கார் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பழுதான கல்விகாரை சரிபார்ப்பதற்காக தென்காசியில் உள்ள ரோட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தார். சேகருடன் அவரோடு பயணித்த மற்றும் ஒருவரும் காரை பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அதிவேகமாக வந்த ஆம்னி பஸ் ஒன்று சேகர் மற்றும் இருவரின் மீது வேகமாக மோதியது. சேகர் மற்றும் அவருடன் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தானது பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

விபத்தில் சிக்கியவர்களின் மூவரின் உடல் பாகங்கள் ரோடு எங்கும் சிதறிக் கிடந்தது. தகவலறிந்த போலீசார் இவர்களின் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.