கரப்பான் பூச்சிக்குப் பயப்படுபவரா நீங்கள்?இதோ உங்களுக்குத்தான் ஆலோசனை!!

பாம்பு வந்தாகூட பயப்படாம அடிச்சுப்புடுவேன், ஆனா கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே உடல் எல்லாம் புல்லரிக்குது என்று பயப்படும் பெண்களும், சிறுவர்களும் ஏராளம்.


கரப்பானை ஒழித்தே தீரவேண்டும் என்று எத்தனை முயற்சி எடுத்தாலும் மீண்டும் மீண்டும் கரப்பான் படை எடுக்கிறதா? இதோ அவற்றை விரட்ட எளிதான் வழிகள்.

மிளகுத் தூளுக்கும் கரப்பான் பூச்சிக்கும் கொஞ்சமும் ஆகாது. அதனால் மிளகுத் தூள் எடுத்துக்கொண்டு அதனுடன் கொஞ்சம் பூண்டு, வெங்காய பேஸ்ட் தயார் செய்து கலந்து தண்ணீரில் நன்றாக கரைய வைத்து, அந்தக் கலவையை, எங்கெங்கு கரப்பான் தென்படுகிறதோ, அங்கெல்லாம் ஊற்றுங்கள். அதன்பிறகே கரப்பான் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்காது.

அதேபோன்று நாட்டு மருந்துக் கடையில் கிராம்பு வாங்கி, அதனை கரப்பான் வரும் இடங்களில் வைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும். கிராம்பு கலந்த தண்ணீரை ஊற்றினாலும் பலன் கிடைக்கும்.

எந்தக் காரணம் கொண்டும் உணவை திறந்து போடாதீர்கள். இரவெல்லாம் திறந்திருக்கும் உணவுக்கு, நிச்சயம் கரப்பான் வந்துவிடும். இந்த உலகம் இருக்கும் வரை கரப்பானும் நிச்சயம் இருக்கும். ஆனால், அது நம்மைத் தேடி வராமல் தடுக்க முடியும் என்பது உண்மைதான்.