10 மாத கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்த ஸ்வேதா..! உடல்கள் சிதறிய கொடூரம்! பதற வைக்கும் காரணம்!

குடும்ப தகராறில் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமானது ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு ரயில் ஒன்று வழக்கமாக சென்று வருகிறது. இந்த ரயிலானது திருச்சி,ஓசூர், பெங்களூர் ஆகிய பகுதிகளை கடந்து மைசூருக்கு செல்லும்.

இன்று காலை ஓசூர் ரயில் நிலையம் அருகே ரெயிலானது சென்று கொண்டிருந்தபோது, இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்துள்ளார். ரெயில் அதிவேகத்தில் வந்ததால் அந்த இளம்பெண் தூக்கி அடிக்கப்பட்டார்.  இளம்பெண்ணின் உடல் சிதறி போனது. பிளாட்ஃபாரத்தில் 10 மாத குழந்தையை வைத்துவிட்டு அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேகமாக ரயில் சென்றதால் தண்டவாளத்தில் இருந்த கற்கள் குழந்தையின் நெற்றியில் பட்டு காயத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக ஓசூர் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உடன் விரைந்து வந்த ஊழியர்கள் குழந்தைகளை மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தலையில் கட்டுப்போடப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தற்கொலை குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் தற்கொலை செய்த இளம்பெண் மூக்கணாம்பட்டி எனும் பகுதியை சேர்ந்த ஸ்வேதா என்பது தெரிய வந்துள்ளது. இவருடைய கணவர் பெயர் முரளி இத்தம்பதியினருக்கு 10 மாதத்தில் சுருதி லக்ஷ்மி என்ற குழந்தையுள்ளது. 

இதனிடையே நேற்றிரவு குழந்தைக்கு மருந்து கொடுக்கும் விவகாரத்தில் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த மனைவி குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. தண்டவாளத்திற்கு அருகே சென்ற குழந்தையை பிளாட்ஃபாரத்தில் அமர்த்திவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.