140 மில்லியன் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த தாவர உண்ணி டைனோசர் தொடை எலும்பு! வைரல் புகைப்படம்!

14 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் உயிரினத்தின் எலும்புகளானது பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் ஆராய்ச்சியாளர்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரான்ஸ் நாட்டில் ஏஞ்சியாக்-சரண்டீ என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியானது அந்நாட்டின் தென்மேற்கு திசையில் உள்ளது. பல அரிய வகை உயிரினங்களின் எலும்புகள் இப்பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 2010 ஆம் ஆண்டு முதல் இந்த பகுதியில் சுற்றுவட்டாரங்களில் சோதனை செய்து வருகின்றனர். 

இதுவரை கிட்டத்தட்ட 40 பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த அரிய வகை உயிரினங்களின் தோல்களையும், எலும்புகளையும் ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் இவர்கள் 14 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் உயிரினத்தின் எலும்புகளை கண்டுபிடித்தனர். இரண்டு மீட்டர் நீளமும் 500 கிலோ எடை உடையதான அந்த எலும்பை இவர்கள் ஆராய்ச்சி செய்தனர். ஆராய்ச்சியின் இறுதியில் இது 14 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசரின் தொடை எலும்பு என்பதை உறுதி செய்துள்ளனர். 

மேலும் இந்த எலும்பானது தாவரங்கள் உட்கொள்ளும் உணவுகளில் ஒன்றாகும் என்று கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்பானது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் விதத்தில் அமைந்திருப்பதாக பணியில் ஈடுபட்டோர் கூறுகின்றனர்.