ஆப்பிள் வாட்ச்சுக்கு வந்த நெருக்கடி என்னன்னு தெரிஞ்சுக்கணுமா?

செப்டம்பர் 21, 2018 ஆப்பிள் வாட்ச் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாட்ச்சில் இருக்கும் சிறப்பம்சம்என்னன்னா இதயத் துடிப்பை கணிக்கக்கூடிய எலக்ட்ரோ கார்டியோ கிராப் எனப்படும் இ.சி.ஜி. ஆப். ஆனால், இது சரிவர வேலை செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு


ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கடந்த செப்டம்பர் 21, 2018 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த வாட்ச்சில் என்னனென்ன இருக்குதுன்னு தெரியுமா?


இதன் சிறப்பு அம்சங்கள்:

1.       ஃபுல் ஸ்கீரின் டிஸ்பிளே.  (முழு திரை காட்சி) இதற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ச்சில் இந்த வசதி கிடையாது

2.       4ஜி சப்போர்ட்

3.       வேகமாக பிரௌஸ் பண்ணக்கூடிய வசதி (Fast browsing)

4.       இசிஜி கணிக்க கூடிய எலக்ட்ரோ கார்டியோகிராம் பயன்பாடு (Electro Cardiogram app)  பொருத்தப்பட்டது.  நம்முடைய இதய துடிப்பின் ரேட்டை , அதாவது நம்முடைய இதயம் எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.

ஆனா, இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸில் பலருக்கும் இ.சி.ஜி. சரிவர இயங்கவில்லை என்பதுதான் புகார். இந்த புகாருக்கு உடனடியாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பதில் வந்துள்ளது. ஆம், இந்த இ.சி.ஜி. ஆப் பயன்பாடு வேலை செய்யவில்லை என்றால் அல்லது இதன் மூலம் இதய துடிப்பின் ரேட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் வாட்ச்சை திருப்பி கொடுத்து விடலாம்.  பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவோம் என்று  என்று கலிபோர்னியாவில் உள்ள  ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

நம்மூருக்கும் இந்த உத்தரவாதம் உண்டா என்று உறுதியாகத் தெரியவில்லை. அதனால் ஆப்பிள் வாங்கி பயன்படுத்திவிட்டு திருப்பித்தரலாம் என்று ஆசைப்பட வேண்டாம்.