கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்! நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!

தமிழ்நாட்டின் சமூக நலனையும், கலாச்சாரத்தையும் கள்ளக்காதல் என்னும் கொடிய காற்று சூரையாடிக்கொண்டிருக்கிறது. தினமும் பல்வேறு இடங்களில் கள்ளக்காதல் தொடர்புடைய செய்தி வெளியாகின்றன.


சென்னை அயனாவரத்தில் நேற்றிரவு தீபிகா என்ற பெண் தன் தாயாரின் கள்ளக்காதலினை தட்டிக்கேட்க சென்ற போது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து விழுந்து உயிருக்கு போராடி வருகிறார். தீபிகா 9-ம் வகுப்பு வரை படித்திருந்தார். பின்னர் அவர் வீட்டுவேலை செய்துவந்தார். இவரின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவர் தாயாரின் பெயர் லட்சுமி. தீபிகா கடந்த 1.5 வருடங்களாக அப்பகுதியில் உள்ள மூலக்கடை வினோத் என்பவரை காதலித்து வந்தார். கணவன் இறந்த பிறகு, லட்சுமி அதேப்பகுதியில் உள்ள கர்ணன் என்ற ரயில்வே ஊழியருடன் கள்ளக்காதல் செய்துவந்தார். 

நேற்றிரவு தீபிகாவின் வீட்டில் கர்ணன் இருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தீபிகாவும் அவள் தம்பியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது லட்சுமி பால்கனியில் பேசிக்கொண்டிருந்தார். வாக்குவாதம் முற்றிப்போய் தீபிகா பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

தலையில் பலத்த காயங்களுடன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தீபிகாவிற்கு முன்னந்தலை உடைந்து இரண்டு கைகள் முறிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக லட்சுமியின் கள்ளக் காதலன் கர்ணனை என்பவரை நிலைய காவலில் வைத்துள்ளனர்.