ஸ்டாலின் மீது மீண்டும் ஒரு வழக்கு... ஆவேசத்தில் அமைச்சர் ஜெயக்குமார்.

வாயைத் திறந்தாலே பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளிவிடுவதுதான் தி.மு.க. தலைவரின் வேலையாக இருக்கிறது. யார் என்ன எழுதிக் கொடுத்தாலும் அப்படியே பேசிவிடுவதால், சிக்கலில் மாட்டிவிடுகிறார்.


ஆம், அமைச்சர் ஜெயக்குமாரிடம் இப்போது வசமாக சிக்கியிருக்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். விரைவில் ஸ்டாலின் மீது புதிய அவதூறு வழக்கு பதியப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

சமீபத்தில் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், மீனவர்களின் பாதுகாப்புக்காக வாங்கிய வாக்கி டாக்கியில் அமைச்சர் ஜெயக்குமார் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டினார்.

அதாவது வாக்கி டாக்கி வாங்கியதில் அமைச்சர் ஜெயக்குமார் 300 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக மக்கள் முன்னே குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஸ்டாலின் மீது வழக்கு தொடர தமிழக அரசு ஒப்புதலை பெற்ற அரசாணையை அமைச்சர் வெளியிட்டுள்ளார். 

தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலின் மீது வழக்கு தொடர அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அரசாணையை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஸ்டாலினுக்கு சிக்கல் மேல் சிக்கல்தான்.