இதயத்தில் ஆஞ்சியோ..! ஸ்டன்ட் சிகிச்சை எல்லாம் பித்தலாட்டம்! பணம் பிடுங்கும் டெக்னிக்! பிரபல டாக்டர் வெளியிட்ட பகீர்!

இதயத்தில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை அப்படியே விட்டு விடுவது இதயத்தின் ஆயுளை நீட்டிக்கும் என்று பிரபல மருத்துவர் கூறியுள்ளார்.


கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த பெல்ல போனப்ப ஹெக்டே இந்தியாவில் மிகவும் பிரபலம் வாய்ந்த இருதய மருத்துவர் ஆவார். இவர் இந்திய அரசின் பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இருதயத்தில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை நீக்குவதற்கு எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்காக ஸ்டென்ட் உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி மூலமும் பைபாஸ் மூலமும் அடைப்புகளை நீக்குவது பித்தலாட்டம் என இவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவை அனைத்தும் வியாபார நோக்கத்துடன் செய்யப்படுகிறதுஎனவும் அவர் கூறியுள்ளார்.

இதயத்தில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் கூட நரம்பு தனக்குத்தானே வேறு பாதையை உண்டாக்கி ரத்த ஓட்டத்தை அமைத்துக்கொள்ளும் என்று இவர் கூறியுள்ளார். ஆக்ஸிசன் குறைந்த அளவு உள்ளிழுக்கப்படுவது இதயத்திற்கு நன்மையைத்தான் தரும். தினமும் அதிகாலையில் எழுந்து வெறும் வயிற்றுடன் உடற்பயிற்சி செய்வதும் பிராணயாமமும் இயற்கையாகவே இதயத்தில் உள்ள அடைப்புகளை அகற்றும் எனவும் அவர் கோரியுள்ளார். 

மேலும் இதயத்தின் அடைப்புகளை நீக்குவதற்கு பதிலாக அதை அப்படியே விட்டு விட்டால் இதயத்தின் ஆயுள் அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆஞ்சியோ செய்வது இருமடங்கு அதிக இதய வலியை உண்டாக்கும் எனவும், பை பாஸ் செய்வது நான்கு மடங்கு வாதம் வர வழிவகுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.