33 வயசாயிடிச்சி, அதனால அந்த நடிகரை தான் கல்யாணம் செய்வேன்! போல்டாக அறிவித்த அஞ்சலி!

நடிகை அஞ்சலி கல்யாணம் செய்து கொண்டால் ஒரு தமிழரை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோயின்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலமாக முன்னணி ஹீரோயினாக வளம் வந்தவர் நடிகை அஞ்சலி. தற்போது அஞ்சலிக்கு வயது 33. இவர் கற்றது தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் இவர்  நடிப்பில் வெளிவந்த அங்காடி தெரு திரைப்படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக இருந்தது. 

பின்னர் கலகலப்பு, எங்கேயும் எபோதும் ஆகிய வெற்றி படங்களில் கதாநாயகியாக வளம் வந்த அஞ்சலி, எங்கேயும் எப்போதும் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் நாயகன் நடிகர் ஜெய்யுடன் நெருக்கமாக பழகி வந்தார். நாளடைவில் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இருவருமே நாங்கள் காதலிக்கவில்லை என்று மறுத்தனர். ஆனாலும் இவர்களை பற்றிய காதல் கிசு கிசுக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றது.

சமீப காலமாக இருவருக்கும் பட வாய்ப்பு குறைந்து வரும் நிலையில், நடிகை அஞ்சலி தற்போது அளித்த பேட்டி ஒன்றில் நான் ஒரு தமிழனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இது மறைமுகமாக நடிகர் ஜெய்யை  கூறுகிறாரே அல்லது வேறு யாரையாவது கூறுகிறாரே என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.