இந்திய போர் விமானத்தின் பைலட்..! சாதித்த டீ கடைக்காரரின் மகள்..! ராணுவ சீருடையில் வந்து தந்தையை நெகிழ வைத்த செயல்!

போபாலை சேர்ந்த டீக்கடைக்காரிர் மகள் தன்னுடைய விடாமுயற்சியால் விமானப்படை அதிகாரியாக பதவியேற்று இருப்பது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.


போபாலை சேர்ந்த ஆஞ்சல் கங்குவார் என்ற இளம் பெண்ணிற்கு தன்னுடைய சிறுவயது முதலே விமானப் படை அதிகாரியாக மாற வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஆஞ்சல் அந்த கனவை விடாமுயற்சியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். 23 வயதாகும் அவர் இந்த இளம் வயதிலேயே விமான படை அதிகாரியாக மாறியிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நீ மூச்சு மாவட்டத்தில் வசித்து வருபவர் தான் சுரேஷ் கங்வால். இவருடைய மகள்தான் ஆஞ்சல் கங்வால். இவர் இதுவரை 5 முறை ஏர்போர்ஸ் காமன் தேர்வுகளை எழுதி தோல்வியுற்று இருக்கிறார். இருப்பினும் விடாமுயற்சியோடு ஆறாவது முறை நடந்த தேர்வில் வெற்றி பெற்று தற்போது விமான படை அதிகாரியாக பதவி ஏற்றிருக்கிறார். 

இந்த தேர்வைப் பொருத்த வரையில் நாடு முழுவதிலும் இருந்து 6 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் அதிலிருந்து 22 பேர் தான் வெற்றி அடைந்துள்ளனர். அந்த 22 பேரில் ஒருவர் தான் இளம்பெண் ஆஞ்சல் கங்குவார் ஆவார். நீமுச்சில் உள்ள சீதாராம் ஜாஜூ அரசு பெண்கள் கல்லூரியில் கணினி அறிவியல் சார்ந்த பட்டப் படிப்பை ஆஞ்சல் பயின்றிருக்கிறார்.இதனைத் தொடர்ந்து அவர் தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடம் கூறவே முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள் பின்னர் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். விமானத் துறை அதிகாரியாக பதவி ஏற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் விடா முயற்சியுடன் படித்து முடித்தவர் தான் ஆஞ்சல் ஆவார்.

ஆஞ்சல் டீக்கடை நடத்தி வந்த தன்னுடைய தந்தைக்கு உதவிகளை செய்து கொண்டே தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார். மேலும் இவர் விமானப் படை அதிகாரியாக பதவி ஏற்பதற்கு முன்னர் சில காலங்கள் மத்திய பிரதேச மாநில அரசில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளராகவும் காவல்துறையில் துணை ஆய்வாளராகவும், பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் அரசு அதிகாரியாக பதவி ஏற்று இருந்தாலும் விமானப்படை அதிகாரி ஆக வேண்டும் என்ற அவரது கனவு தற்போது நிறைவேறியுள்ளது. சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் பல இளம்பெண்களுக்கு ஆஞ்சல் ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.