அண்ணன் திமுக வேட்பாளர்! தம்பி அதிமுக வேட்பாளர்! உடன் பிறப்புகளை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் கழகங்கள்!

ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் உடன்பிறந்த சகோதரர்கள் என்று தெரியவந்துள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலும் திமுகவும் அதிமுகவும் இடைத்தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.

அதன்படி காலியாக உள்ள ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக மகாராசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதே ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக லோகராசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மகாராசன் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் லோகராசனின் அண்ணன் ஆவார்.

திமுக அதிமுக எனும் இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளராக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணனும் தம்பியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது கிட்டத்தட்ட உடன்பிறப்புகளை நேரடியாக தேர்தல் களத்தில் அனுமதித்துள்ள கழகங்களின் செயலாகவே பார்க்கப்படுகிறது.

இருப்பினும் வெற்றி பெறப்போவது திமுக வேட்பாளரான அண்ணன் மகாராசன் அல்லது அதிமுக வேட்பாளரான லோகராசனா என்பது போகப்போகத்தான் தெரியும்.