உங்கள் கணவன் மறுபடியும் இதை எப்போ பண்ணுவார்? வீடியோ வெளியிட்ட டிடி கேட்ட கேள்வி..! குஷ்பு சொன்ன தரமான பதில்!

பிரபல தொகுப்பாளினி டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி , தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் , தொகுப்பாளினியாக வேலை பார்ப்பவர் , டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. தொலைக்காட்சிகளில் மிகப்பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவராக டிடி , வலம் வருகிறார். இது மட்டுமில்லாமல் சில சினிமா திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மிகவும் மகிழ்ச்சியாக சுற்றித்திரியும் டிடி தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காமெடி நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் சுந்தர் சி இணைந்து நடித்திருக்கும் ஒரு திரைப்படத்தின் காமெடி டிவியில் ஒளிபரப்பப் பட்டுள்ளது. அந்த வீடியோவை தன்னுடைய மொபைலில் படம் பிடித்து அதனை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவிற்கு கேப்சனாக , லைஃப்ல என்ன நடந்தாலும் சரி, இந்த மாதிரி காமெடி பாக்குறத நிறுத்தவே கூடாது, அல்டிமேட் வடிவேலு சார்.

சுந்தர் சாரை கேட்கிறேன், இந்த காட்சியை படம் பிடிக்கும் போது ஏற்பட்ட நினைவுகளை எங்களுக்காக மீண்டும் நினைவு படுத்த முடியுமா? குஷ்பூ மேடம் இதை பாருங்கள். சிரிக்காமல் நீங்கள் விடமாட்டீர்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்த பதிவுக்கு நடிகை குஷ்புவும் பதில் அளித்துள்ளார். அதாவது சவால் விடு அடுத்த முறை சுந்தரரை பார்க்கும்பொழுது இந்த கேள்வியை அவரிடம் கேளு என்று சுந்தர் .சி - யின் மனைவியான குஷ்பு கூறியுள்ளார்.