வாவ் பிரசவம் ஆன மறு நிமிடமே எமி ஜாக்சன் செம வெளியிட்ட புகைப்படம்! என்ன குழந்தை தெரியுமா?

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த எமி ஜாக்சனுக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.


மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து விக்ரமுடன் ஐ , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.0 போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தார். இவர் கடைசியாக ரஜினியுடன் இணைந்து 2.0 திரைப்படத்தில் தான் நடித்திருந்தார் . இதற்கு பின் வேறு எந்த திரைப்படத்திலும் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை எமி ஜாக்சன் , மிகப்பெரிய தொழிலதிபரான ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார் . இருவரும் லிவிங் டுகெதர் இல் வாழ்ந்துவந்தனர் . இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் நடிகை எமிஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் . மேலும் இவர்கள் இருவரும் தன் குழந்தை பிறந்த உடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தனர். 

தற்போது நடிகை எமி ஜாக்சனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த சந்தோஷமான செய்தியை எமிஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டுள்ளார். 

அந்த புகைபடத்தில் நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய அழகிய குழந்தையை மார்பில் அணைத்தவாறு அருகினில் தன் காதலருடன் இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து எமி ஜாக்சனின் ரசிகர்கள் உற்சாகத்தில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.